Saturday, November 18, 2017

*
பொய்யான
உன் கோபத்தைப் போல
எனக்கும் அப்போது
கோபம் வந்திருந்தது.
*
பின்னிரவு நேரத்தில்
இன்று மீண்டும்
சாரல் மழையில்
நடந்தேன்.
*
கட்டவிழ்ந்த இருட்டுக்குள்
நீரில் நனைந்த
நீண்ட பாதை
காணாமல் போயிருந்தது
*
ஒருவருக்கொருவர்
துணையாய் இருக்குமென
நினைவுகளுடன்
கைகோர்த்துக் கொண்டேன்.
*
தனிமையில் தவிக்கும்
கவிதைகளை
அறிமுகப்படுத்தும் ஆசையில்
உன்னைப் பெயரிட்டு அழைத்தேன்
*
நுட்பமாக நான் சூட்டிய
அத்தனை பெயர்களாலும்
கனத்த குரலில்
அழைத்து அழைத்து மகிழ்ந்தேன்.
*
விலையுயர்ந்த
கண்ணிர்த் துளிகள்
ஈரம் சொட்டச் சொட்ட
மண்ணில் விழுந்தன.
*
கவலையுடன் மண்டியிட்டு
எத்தனை முறை
என்னைக் கொல்வாயென
உயிர் அதிரக் கத்தினேன்.
*
கனமழை ஆசிர்வதித்தது
*


* பொய்யான உன் கோபத்தைப் போல எனக்கும் அப்போது கோபம் வந்திருந்தது. * பின்னிரவு நேரத்தில் இன்று மீண்டும் சாரல் மழையில் நடந்...